உங்களுக்கு புரியும்படி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன், மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள் - பார்வதி

நடிகை பார்வதி

இந்திய மக்கள் பலராலும் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே வரைவை வெளியிட்டிருப்பதற்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார் நடிகை பார்வதி.

 • Share this:
  பிரபல மலையாள நடிகை பார்வதி திருவொத்து, EIA 2020-க்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்திருப்பதுடன், சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய மக்கள் பலராலும் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே வரைவை வெளியிட்டிருப்பதற்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

  நோய் பரவல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த பெருந்தொற்று காலத்தில், தங்களின் உயிரையும் அன்பான சுற்றத்தினரின் உயிர்களுக்களைக் காத்துக்கொள்ளவும் மக்கள் போராடும் இந்த வேளையில், பல இந்தியர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் EIA குறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், அமைச்சகத்துக்கு இந்திய மக்களின் மீது அக்கறை இல்லையா என்னும் கேள்வியை எழுப்புவதாக, பார்வதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க: ”நேர்மையாக வரிசெலுத்துபவர்களை இந்தத் திட்டம் கவுரவிக்கும்” - இன்று வெளியிடவிருக்கும் அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட்..

  காடுகள், சுற்றுச்சுழல், ஏழை மக்கள், உழைக்கும் மக்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் அழிக்கக்கூடிய இந்த மோசமான சட்ட  வரைவு, மனித உரிமை சார்ந்த விஷயங்களை கேலிக்கூத்தாக்கிவிடும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

  ”உங்களுக்கும் புரியும் வகையில், எதிர்ப்புக் கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். மக்களுக்கு புரியும் இந்திய மொழிகளில் இந்த வரைவின் அறிவிப்பை நீங்கள் அளித்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: