முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bloody Sweet! கவினின் 'டாடா'வில் மகன்.... தளபதி விஜய்யின் 'லியோ'வில் மகள் - உற்சாகத்தில் பிரபல நடிகர்

Bloody Sweet! கவினின் 'டாடா'வில் மகன்.... தளபதி விஜய்யின் 'லியோ'வில் மகள் - உற்சாகத்தில் பிரபல நடிகர்

கவின் - விஜய்

கவின் - விஜய்

இந்தப் படத்தில் கவினின் மகனாக நடித்திருந்தது பிரபல நடிகர் அர்ஜுனனின் மகன் இலன் என்ற தகவல் வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டாடா. இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகின்றன. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

நடிகர் அர்ஜுனனின் மகள் இயல், மகன் இலன்

இந்தப் படம் கல்லூரி மாணவன் குழந்தைக்கு அப்பாவாக நேர்கிறது என்ற சுவாரசிய ஒன்லைனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கவினின் மகனாக நடித்திருந்தது பிரபல நடிகர் அர்ஜுனனின் மகன் இலன் என்ற தகவல் வெளியானது. இதனை அர்ஜுனனும் உறுதி செய்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் லியோ படத்தில் அர்ஜுனனின் மகள் இயல் நடித்துவருகிறார். இதனை அர்ஜுனன் ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அர்ஜுனனின் மகன் இலன், மகள் இயல் இருவரும் டிவின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியவர் அர்ஜுனன்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Kavin