யாரோ ஒருவர் செய்கிற உதவி சிலநேரம் ஒரு தலைமுறையையே மாற்றியமைக்கும். அப்படியொரு உதவியை பிரகாஷ்ராஜ் செய்திருப்பதை இயக்குனர் நவீன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
ஸ்ரீசந்தானா என்ற மாணவி அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் யுகேயில் உள்ள யூனிவர்ஸிட்டியில் சேர முடியாமல் இருந்துள்ளார். இந்த மாணவிக்கு தந்தை கிடையாது. இணையத்தில் வந்த இந்த செய்தியை நடிகர் பிரகாஷ்ராஜின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் நவீன். செய்தியின் உண்மைத்தன்மையை கேட்டு அறிந்து கொண்ட அவர் மாணவியின் படிப்புக்கு உதவியுள்ளார்.
இப்போது அந்த
மாணவி தனது மாஸ்டர் டிகிரியை யுகே பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அந்த மாணவி அங்கேயே நல்ல வேலையில் பணிபுரிவதற்கான உதவியையும் பிரகாஷ்ராஜ் செய்துள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார். "வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட ஏழ்மையின் காரணமாக எட்ட முடியாத அவர்களுக்கு பிரகாஷ்ராஜ் போன்ற மனிதர்கள் ஒரு கலங்கரை ஒளி. நன்றி சார்" என நவீன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க -
தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான் - அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!
உதவி பெற்று இன்று யுகேயிலேயே படித்து அங்கு வேலை பார்க்கப் போகும் இந்த மாணவி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். பிரகாஷ்ராஜ் செய்த உதவியினால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையே இன்று தலைகீழாக மாறியுள்ளது.
கல்வியே செல்வம் என்பது சும்மாயில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.