முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

பூஜா ஹெக்டே - சூர்யா

பூஜா ஹெக்டே - சூர்யா

சூர்யா 39 பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர் மாறியதால் படம் தாமதமானது.

  • Last Updated :

சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா கடைசியாக ஜூலை 1-ஆம் தேதி வெளியான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதோடு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்புகளைப் பெற்று வசூலை குவித்து வரும் வேளையில், இறுதியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூர்யா.

இதற்கிடையே அவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ என்றழைக்கப்படும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கிருத்தி ஷெட்டியுடன் சூர்யா நடிக்கும் இதன் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதோடு இயக்குனர் சிவாவுடன் சூர்யா இணையும் 'சூர்யா 39' என்றழைக்கப்படும் படத்தின் பணிகளை அவர் விரைவில் தொடங்கவிருக்கிறார்.

3 சர்வதேச விருதுகள் 2 நாமினேஷன்களைப் பெற்ற பார்த்திபனின் இரவின் நிழல்!

சூர்யா 39 பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர் மாறியதால் படம் தாமதமானது. பிரபாஸின் ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்களின் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அதோடு இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் அவர் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு பூஜா ஹெக்டே தமிழ்த் திரையுலகில் பிரபலமானார். நயன்தாரா மற்றும் சமந்தாவுக்குப் பிறகு, தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் பூஜா ஹெக்டே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    வெளியாகியுள்ள தகவலின்படி, சூர்யா 39 தயாரிப்பாளர்கள் பூஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்கவிருக்கிறார் சூர்யா.

    First published:

    Tags: Actor Suriya, Pooja Hegde