முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அரபிக் குத்து அன்சீன் வீடியோவைப் பகிர்ந்த பூஜா ஹெக்டே!

அரபிக் குத்து அன்சீன் வீடியோவைப் பகிர்ந்த பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்த BTS வீடியோ ரசிகர்களிடமிருந்து பல பார்வைகளைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றார். இப்படம் ஏப்ரல் 2022-ல் வெளியானது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியது. அதோடு டிஜிட்டல் தளத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் 2022-ல் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்றாகும். பீஸ்ட் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானதோடு, ஒரு வருடத்திற்குப் பிறகும் பாடல்கள் பிளேலிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது. ‘அரபிக் குத்து’ பாடல் உலக அளவில் பிரபலமாகி, நாடு முழுவதும் வைரலானது. இந்நிலையில் பூஜா ஹெக்டே 'அரபிக் குத்து' பாடலின் 1 வருடத்தை கொண்டாடும் வகையில் அதன் அன்சீன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த அவர், “அரபிக்குத்து 1 வருடம்... சரி, அன்றிலிருந்து தொடர்ந்து வரும் அனைத்து கூடுதல் அன்பிற்கும் சில காட்சிகள் உங்களுக்காக” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)இந்த BTS வீடியோ ரசிகர்களிடமிருந்து பல பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தார். வேலையைப் பொறுத்தவரை, பூஜா ஹெக்டே கடைசியாக ‘சர்க்கஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். இப்போது இந்தியிலும், தெலுங்கிலும் தலா ஒரு படத்தை கைவசம் வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pooja Hegde