Pooja Hegde: விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே?

Pooja Hegde: விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே?

பூஜா ஹெக்டே

இலியானாவுக்கும் பூஜா ஹெக்டேக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இலியானா 2006-ல் கேடி படத்தில் நடித்தார், படம் ஓடவில்லை. பிறகு தெலுங்கு, இந்தியில் நடித்து, முன்னணி நடிகையான பிறகு, இலியானாவின் பின்னால் தமிழ் திரையுலகம் கால்ஷீட்டுக்காக அலைந்தது.

  • Share this:

    பூஜா ஹெக்டே அறிமுகமானது மிஷ்கினின் முகமூடி படத்தில். அந்தப் படத்தின் மிகப்பெரிய மைனஸ், நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே என பலரும் குறிப்பிட்டனர். அதோடு தமிழில் காணாமல் போனார். ஆனால், தெலுங்கு அவரை அரவணைத்தது. துவ்வாடு ஜெகன்நாதம், மகரிஷி, அல வைகுந்தபுரமலு என முக்கியமான படங்களில் நடித்தார். இந்தியில் மொகஞ்சதாரோ, ஹவுஸ்ஃபுல் 4 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இந்தி, தெலுங்கின் முன்னணி நடிகையானார்.

    அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அண்ணாத்த படத்தை முடித்த பின் இப்படம் ஆரம்பமாகிறது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: