Beast: பீஸ்ட் பாடல் காட்சிக்கான நடன ஒத்திகையில் பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே

டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

  • Share this:
    பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிக்காக தான் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    Pooja hegde's dance practice for Beast
    பூஜா ஹெக்டே


    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததையடுத்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிக்காக தான் நடன பயிற்சி மேற்கொண்டு வருவதாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: