புட்ட பொம்மா பாடலுக்கு தான் ஆடிய வித்தியாசமான நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
கடந்த 2020-ம் ஆண்டு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ஆல வைகுண்டபுரமுலூ. ரூ.100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘புட்டபொம்மா’ பாடல், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக அந்தப் பாடலில், அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டேவின் நடனம், மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை பார்க்கத் தூண்டியது. அதோடு பலர் இந்தப் பாடலுக்கு நடனமாடி இணையத்திலும் வெளியிட்டனர்.
இந்த படம் ரிலீசாகி தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்திருக்கிற நிலையில், இது குறித்த நினைவுகளை
படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ஹீரோயின்
பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
அதாவது மேக்கப் ரூமில் இருந்தபடியே அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹாவுடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய
வீடியோ தான் அது. இதைப் பார்த்த ரசிகர்கள், இருவரின் நடனமும் அருமையாக இருப்பதாக தங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.