முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘சிறந்த பான் – இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும்’ – த்ரிஷா

‘சிறந்த பான் – இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும்’ – த்ரிஷா

டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை த்ரிஷா

டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை த்ரிஷா

PS 1 Trisha : மார்தட்டி சொல்லிக்கொள்வோம் இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளோம் என்று. இதைவிட சிறந்த விஷயம் என் வாழ்க்கையில் நடந்தது இல்லை – ஜெயம் ரவி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிறந்த பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும் என்று படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா கூறியுள்ளார்.

கல்கி எழுதிய சோழர்களின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன், மணி ரத்னம் இயக்கத்தில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையொட்டி டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ‘2, 3 பேர் சேர்ந்து நடிப்பது மல்டிஸ்டாரர் இல்லை. இதுதான் மல்டி ஸ்டாரர். 30 பேர் பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கிறார்கள்.

பிரமாண்டத்தின் உச்சமாய் பொன்னியின் செல்வன் டீசர்!

எனக்கு பிடித்த நடிகர்கள் பலர் இதில் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களாக இருந்தனர். அந்த அளவிற்கு வேலை வாங்கியிருந்தார் மணிரத்னம்

' isDesktop="true" id="769182" youtubeid="LYMhbm2ORoc" category="cinema">

என் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வர சொன்னார். நான் ஒரு புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தேன். என்னடா இது என்றார்! பொன்னியின் செல்வன் என்றேன். ஒரு புத்தகம்தான் இருக்கு ஐந்து புத்தகம் போய் எடுத்துவா என்று கூறினார். அப்படிதான் எனக்கு பொன்னியின் செல்வன் ஞாபாகம் இருக்கிறது.’ என்றார்.

பொன்னியின் செல்வனான அருள் மொழி வர்மன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவி பேசுகையில், ‘மார்தட்டி சொல்லிக்கொள்வோம் இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளோம் என்று.  இதைவிட சிறந்த விஷயம் என் வாழ்க்கையில் நடந்தது இல்லை.

நீதான் பொன்னியின் செல்வனாக நடிக்கிறாய் என்று மணிரத்னம் சொன்ன போது, இந்த டீசரை பார்க்கும் போது இருந்ததைவிட அதிகமாக உடல் சிலிர்த்தது. இது எங்கள் படம் இல்லை. உங்கள் படம். நம் படம் என சொல்ல வேண்டும்.’ என்றார்.

‘பொன்னியின் செல்வன்படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும்’ – ஜெயமோகன்

குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷா பேசுகையில், ‘நான் மணிரத்னத்தின் குந்தவை அது போதும். மணிரத்னம் படத்தில் நடிக்க அனைவரும் விரும்புவார்கள். அப்படி அவரின் கனவு படத்தில் நான் குந்தவையாக நடித்துள்ளேன். இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு நன்றி.

பான் இந்தியா படம் என்றாலே நம் தென்னிந்திய படத்தை பார்த்து ரசிக்கிறார்கள். அந்த வகையில் இந்த பொன்னியின் செல்வன் சிறந்த பான் இந்தியா படமாக அமையும்.’ என்றார்.

First published:

Tags: Ponniyin selvan