ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து ஏன் இடம்பெறவில்லை? மணிரத்னம் விளக்கம்

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து ஏன் இடம்பெறவில்லை? மணிரத்னம் விளக்கம்

மணி ரத்னம்- வைரமுத்து

மணி ரத்னம்- வைரமுத்து

பாடலாசிரியர் இளங்கோவுடன் முதல் பாடலை பண்ணும்போதே இவர் தமிழ் புலமை, சொல்லாடலில் திறமை மிக்கவர் என்று எனக்கு தெரிந்து விட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

வைரமுத்துவுடன் இணைந்து மணிரத்னம் ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரது கனவுப் படமான பொன்னியின் செல்வன்படத்தில் அவர் இடம்பெறவில்லை. இது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு மணி ரத்னம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதற்கு முன்பாக அது தொடர்பான அனைத்து இடங்களுக்கும் நாங்கள் சென்றோம். எல்லா கோவில்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்து ஆய்வு எடுத்துதான் படத்தை ஆரம்பித்தோம்.

Exclusive : பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி, கமல் இடம்பெறாதது ஏன்? மணிரத்னம் பதில்

வைரமுத்து ஏன் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்று கேட்கிறார்கள். வைரமுத்து கூட பணியாற்றினால் மட்டுமல்ல, யாருடன் பணியாற்றினாலும் ஒரே மாதிரியான உழைப்பு தான் இருக்கும்.

' isDesktop="true" id="811020" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

வைரமுத்து யாருடன் பணியாற்றினாலும் ஒரே மாதிரியான உழைப்பு தான் இருக்கும். நான் யாருடன் பணியாற்றினாலும் அதை உழைப்புதான். அதேபோன்றுதான் ரஹ்மானும்.

2K கிட்ஸ் விரும்பும் வகையில் பொன்னியின் செல்வன் படம் இருக்குமா? மணிரத்னம் விளக்கம்

பொன்னியின் செல்வன் படத்தில் திறமை மிக்க பல தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.  பி.சி. ஸ்ரீராம் உடன் படம் பண்ணியபோது ஒருவிதமான அனுபவம் கிடைத்தது. அதன்பின்னர், சந்தோஷ் சிவனுடன் படத்தில் இணைந்தேன். புதிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணையும்போது, படத்தில் புதிய பரிணாமம் கிடைக்கிறது.

தமிழ் கவிதைக்கு நாட்டில் பல திறமை மிக்கவர்கள் உள்ளார்கள். எனவே புதியவர்களை கொண்டுவருவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

பாடலாசிரியர் இளங்கோவின் கவிதைகளை படித்துள்ளேன். இதுதொடர்பாக ஜெயமோகனுடனும் பேசியுள்ளேன். அவர்தான் இளங்கோ நல்ல தமிழ்புலமை வாய்ந்தவர் என்று கூறினார். அவருடன் முதல் பாடலை பண்ணும்போதே இவர் தமிழ் புலமை, சொல்லாடலில் திறமை மிக்கவர் என்று எனக்கு தெரிந்து விட்டது.

இவ்வாறு மணி ரத்னம் கூறினார்.

Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan