Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்திற்காக ட்விட்டரில் பெயர்களை மாற்றிய விக்ரம், த்ரிஷா…

பொன்னியின் செல்வன் படத்திற்காக ட்விட்டரில் பெயர்களை மாற்றிய விக்ரம், த்ரிஷா…

விக்ரம் - த்ரிஷா

விக்ரம் - த்ரிஷா

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக விக்ரம் மற்றும் த்ரிஷா ஆகியோர் படத்தின் கேரக்டர் பெயர்களை ட்விட்டரில் மாற்றியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ட்விட்டர் புரொபைலில் விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும், த்ரிஷா குந்தவை என்றும் பெயரை தற்காலிகமாக மாற்றியுள்ளார்கள். இவர்களைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் தங்களது பெயர்களை விரைவில் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    Ratchasa Maamaney: பொன்னியின் செல்வன் ‘ராட்சஸ மாமனே’ லிரிக் வீடியோ வெளியீடு!

    இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.





    ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



    இந்நிலையில் படத்தின் கேரக்டர் பெயர்களை, விக்ரம், த்ரிஷா ஆகியோர் ட்விட்டரில் மாற்றிக் கொண்டுள்ளனர். இனிஅடுத்தடுத்து படத்திற்கான புரொமாஷன் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்திலிருந்து புதிய அப்டேட்டாக ராட்சஸ மாமனே என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. பொன்னி நதி, சோழா சோழா, ராட்சஸ மாமனே என 3 பாடல்களின் லிரிக் வீடியோ தற்போது வரை வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி