ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரு போஸ்டர் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா... பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

ஒரு போஸ்டர் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா... பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

த்ரிஷாவை சிவப்பான தோலில் அழகாக காட்டிவிட்டு, அவர் அருகில் இருக்கும் சிறுமிகளை கறுப்பாகக் காட்டியிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொன்னியின் செல்வன் போஸ்டர்களை இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள காவிய திரைப்படம் பொன்னியின் செல்வன். மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு குடும்பத்தின் அதிகாரப் போராட்டம், பேரரசரின் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் வன்முறை பிளவு ஆகியவற்றை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் முதல் பாகம் உருவாகியுள்ளது.

துணிச்சலான வீரர்கள், தந்திரமான உளவாளிகள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் அனைவரும் சோழ பேரரசை வெல்ல முயற்சிக்கும் ஒரு சாகசக் கதை இது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இப்படம் செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

பிரிவுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... என்ன நடந்தது?

அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோரின் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இந்தப் போஸ்டர்களைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். தஞ்சாவூரை மையப்படுத்திய பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அப்படியே வடஇந்திய பீரியட் படத்தைப் போல இருப்பதாகவும், த்ரிஷாவை சிவப்பான தோலில் அழகாக காட்டிவிட்டு, அவர் அருகில் இருக்கும் சிறுமிகளை கறுப்பாகக் காட்டியிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

ரிலீஸ் தேதியுடன் நடிகர்களின் லுக்கை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரியும்... மேடை நாடக நடிகர் ரஜினி தெரியுமா?

கார்த்தியின் வந்தியத்தேவன் தோற்றம் அவர் நடித்த காஷ்மோரா படத்தை நினைவுப்படுத்துவதாகவும், குறிப்பாக விக்ரம் இடம்பெற்றுள்ள போஸ்டரில் அவரது தலையை தனியாக ஒட்டி வைத்தது போலிருப்பதாகவும், அதிலும் அந்த தலை உடலுடன் சரியாக ஒட்டவில்லை என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai, Ponniyin selvan