ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு சவாலாக இருந்தது இந்த விஷயம்தான்… விவரிக்கும் மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு சவாலாக இருந்தது இந்த விஷயம்தான்… விவரிக்கும் மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரையும் எடுத்து தனித்தனியாக பண்ண முடியும். இது நாவலுக்கும் படத்துக்கு மிகப்பெரிய பலம். இது சினிமாவுக்கே எழுதப்பட்ட நாவலாக கருதுகிறேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கு சவாலானதாக  இருந்த அம்சங்கள் குறித்து இயக்குனர் மணி ரத்னம் விவரித்துள்ளார்.

பெரும எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு மணிரத்னம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

என்னுடைய பார்வையில் பொன்னியன் செல்வன் நாவலை படமாக இயக்கியுள்ளேன். பொன்னியின் செல்வன் நாவல் எனக்கு பெருமை அளிக்கிறது. இன்றைக்கும் நான் கல்கியின் ரசிகன்தான்.

Ponniyin Selvan: I | பொன்னியின் செல்வன் - படமா? பாடமா? 

இந்த நாவலின் பெருமையை உணர்ந்து அதற்கு ஏற்ற உழைப்பையும், தியாகத்தையும் இந்த படத்தில் கொடுத்துள்ளோம். பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தபோது வசனம்தான் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தை படத்தை நினைவு படுத்தவேண்டும். அதேநேரம் அலங்கார தமிழை இதில் சேர்க்க முடியாது.

' isDesktop="true" id="810984" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

வசனங்கள் நடிப்பு தன்மைக்கு எளிதாக இருக்கவேண்டும். நாடகம் போன்று அமைந்து விடக் கூடாது. இந்த இடத்தில் ஜெயமோகன் மிகப் பெரும் உதவியாக இருந்தார். தூய தமிழாக இருந்தாலும், அதனை நடிப்பதற்கு ஏற்றபடி அதன் தன்மை மாறாமல் ஜெயமோகன் கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் ஒரு லிஸ்ட்!

கல்கி ஒவ்வொரு கேரக்டரையும் விவரித்துள்ளார். அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் படத்தின் நடிகர்களை தேர்வு செய்துள்ளோம். பொன்னியின் செல்வன் படம் எப்போது வெளியானாலும் அதற்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும்.

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரையும் எடுத்து தனித்தனியாக பண்ண முடியும். இது நாவலுக்கும் படத்துக்கு மிகப்பெரிய பலம். இது சினிமாவுக்கே எழுதப்பட்ட நாவலாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan