Home /News /entertainment /

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

பொன்னியின் செல்வன் தெலுங்கு

பொன்னியின் செல்வன் தெலுங்கு

இவர் தற்போது விஜய் நடித்தவரும் வாரிசு திரைப்படத்தை தயாரிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆந்திராவில் நடிகர் விஜய் திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வெளியிடுகிறார்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் PS-1 என்ற பெயரில் தெலுங்கு,  ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.  அதற்கான வியாபார வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன.  அதில் முதல் கட்டமாக தெலுங்கு மொழியில் தயாரிப்பாளர் தில் ராஜு, PS-1 திரைப்படத்தை வெளியிடுகிறார்.

பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி ஆங்கர் தியா.. குவியும் வாழ்த்துக்கள்!



இவர் தற்போது விஜய் நடித்தவரும் வாரிசு திரைப்படத்தை தயாரிக்கிறார். அதை தவிர, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தையும் தயாரிக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும்,  விநியோகஸ்தரமாகவும் இருக்கும் தில் ராஜு,  பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவது பலமாக கருதப்படுகிறது.

பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் PS-1 திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பொன்னியின் செல்வன் பட குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Kollywood, Ponniyin selvan, Tamil Cinema

அடுத்த செய்தி