Home /News /entertainment /

அடுத்த மாதம் வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்… தஞ்சையில் வெளியீட்டு விழா நடைபெற என்ன காரணம் தெரியுமா?

அடுத்த மாதம் வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்… தஞ்சையில் வெளியீட்டு விழா நடைபெற என்ன காரணம் தெரியுமா?

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

Ponniyin Selvan Teaser : செப்டம்பர் 30-ம்தேதி பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் ஜூலை முதல் வாரம் வெளியாகிறது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.  இரண்டு பாகங்களாக உருவாகும் அந்த படத்தில் கார்த்தி, வந்தியதேவனாகவும்,  ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும் நடிக்கின்றனர்.

இவர்களை தவிர ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  பொன்னின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியாகிறது.

இதையும் படிங்க - வித்தியாசமான லுக்கில் நிதி அகர்வால் - போட்டோஸ்

இந்த நிலையில் படத்தின் டீசரை ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடுகின்றனர்.  அந்த வெளியீட்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைத்து அதில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.  அவர்களை தவிர இன்னும் சில திரைப்பட கலைஞர்களும் அழைக்கப்படவுள்ளனர்.

இதையும் படிங்க - விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்த கமல்…

டீசரை தொடர்ந்து பொன்னியின் செல்வன் முதல் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தொடர்ந்து நடத்த இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறார்.

பொதுவாக பெரும்பாலான படங்களின் டீசர் வெளியீட்டு விழாக்கள் சென்னையை மையமாக வைத்து நடைபெறும். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் தஞ்சை மண்ணுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், படத்தின் டீசரை அங்கிருந்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan

அடுத்த செய்தி