முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெள்ளிக்கிழமை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட டீசர்!

வெள்ளிக்கிழமை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட டீசர்!

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான டீசர் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 5 மொழிகளில் 5 பிரபலங்களை வெளியிட வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கான புரமோஷன் வேலைகளை பட குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.  அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஆதித்ய கரிகாலன் மற்றும் வந்திய தேவன் ஆகியோரின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதாபாத்திரங்களின் தோற்றமும் வெளியிட உள்ளது. அது முடிவடைந்த உடன்,  வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also read... 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!

ஐந்து மொழிகளில் ஐந்து பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளனர்.  அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டர் அரங்கில் படத்தின் டீசரை செய்தியாளர்களுக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Mani rathnam, Ponniyin selvan