Home /News /entertainment /

திரையரங்குகளில் வெளியிடப்படும் பொன்னியின் செல்வன் டீசர்… ரசிகர்கள் வரவேற்பு

திரையரங்குகளில் வெளியிடப்படும் பொன்னியின் செல்வன் டீசர்… ரசிகர்கள் வரவேற்பு

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா

Ponniyin Selvan Teaser : பொன்னியின் செல்வன் படத்தை ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப். 2 படங்களை விட பிரமாண்டமாக வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கூறியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு ரசிகர்கள் மிகப்பெரும் வரவேற்பை அளிப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். முன்பு தீவிரமாக இறங்கினார். இந்த முயற்சி அவருக்கு பலன் அளிக்கவில்லை.

    கமல்ஹாசனும் இதே முயற்சியில் இறங்க அவருக்கும் முயற்சி கைகொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த படத்தின் பணிகளை தொடங்கிய மணிரத்னம், கொரோனா பிரச்னைகளுக்கு நடுவே வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தி வெற்றிகரமாக படத்தை உருவாக்கியுள்ளார்.

    தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள் 

    இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்பட மக்களால் நன்கு அறியப்பட்ட 30க்கும் அதிகமான நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்று, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    தற்போது வரையில் இந்த டீசர் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் டீசர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது யானை, விக்ரம் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இடைவேளையின் போது பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடப்படுகிறது.



    இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளிப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 30-ம்தேதி பொன்னியி செல்வன் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

    ‘சிறந்த பான் – இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும்’ – த்ரிஷா

    இதனை ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப். 2 படங்களை விட பிரமாண்டமாக வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி