Home /News /entertainment /

‘அடுத்த தலைமுறைக்காக மணிரத்னம் பொன்னியின் செல்வனை கொடுத்துள்ளார்’ – நடிகர் கார்த்தி பாராட்டு

‘அடுத்த தலைமுறைக்காக மணிரத்னம் பொன்னியின் செல்வனை கொடுத்துள்ளார்’ – நடிகர் கார்த்தி பாராட்டு

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம்.

Ponniyin Selvan : இந்தியில் அமிதாப் பச்சனும், தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் தமிழில் சூர்யா ஆகியோர் படத்தின் டீசரை வெளியிட்டனர்.

    ‘வரலாறு தெரியாதவர், வரலாறு படைக்க முடியாது. அடுத்த தலைமுறையினருக்காக பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் கொடுத்துள்ளார்’ என்று நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியில் அமிதாப் பச்சனும், தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் தமிழில் சூர்யா ஆகியோர் படத்தின் டீசரை வெளியிட்டனர்.

    பிரமாண்டத்தின் உச்சமாய் பொன்னியின் செல்வன் டீசர்!

    இதையொட்டி சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, த்ரிஷா, இயக்குனர் மணிரத்தினம் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது-

    நாமலாம் வரலாறு வகுப்புனு சொன்னாலே தூங்குவோம். நான்லாம் தூங்குறத மாதிரி  தெரியாம தூங்குவேன். கொஞ்ச நேரம் கவனிப்போம்.

    அந்த மாதிரி கொஞ்ச நேரம் கவனிதத் நேரத்தில் இவர்களை பற்றி தெரிந்திருப்போம். அப்படி தெரிந்திருந்தும் நான் தமிழன் தமிழன் என கூறுவோம். என்னடா பண்ணாங்கனு கேட்ட தெரியாது. இந்தப் படத்தில் நம் முன்னோர்கள் என்ன பண்ணினார்கள் என தெரியும்.

    தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்

    வரலாறு படிக்காமல், வரலாறு படைக்க முடியாது. அடுத்த தலைமுறைக்காக மணிரத்னம் இந்த படத்தை கொடுக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் எப்போதும் கிடைக்காது.

    2000 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை தற்போது வரை கம்பீரமாக உள்ளது. தற்போது தமிழக அரசு பயன்படுத்தும் திட்டங்கள் சோழர் கொண்டு வந்தது.

    என் அம்மாவிடம் வந்தியத்தேவன் கதாபாத்திரம் செய்யப் போகிறேன் என்று நான் சொன்னேன். அப்போது அவர், தான் வந்தியத்தேவன் போல் ஒருவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாக என்னிடம் கூறினார்.

    இவ்வாறு கார்த்தி பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி