யூடியூபில் நேற்று வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் பட டீசர் அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் படம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்டோர் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை தழுவினர். நீண்ட முயற்சிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம்’ – டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேச்சு
பொன்னியின் செல்வன் நாவல் பிரமாண்ட காட்சிகளை மனதில் நிறுத்தும் என்பதாலும், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களாலும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது..
படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் பட டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி 15 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
Have you seen the #PS1 teaser yet?!
▶️ https://t.co/w6NWsjPgKr#PS1Teaser #PonniyinSelvanTeaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial pic.twitter.com/UfnXKjlzKr
— Madras Talkies (@MadrasTalkies_) July 9, 2022
பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியிடப்படவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ponniyin selvan