முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘சோழர்களின் ஆட்சிக்காலம்’ – வரவேற்பை பெறும் பொன்னியின் செல்வன் புதிய வீடியோ

‘சோழர்களின் ஆட்சிக்காலம்’ – வரவேற்பை பெறும் பொன்னியின் செல்வன் புதிய வீடியோ

பொன்னியின் செல்வன் போஸ்டர்

பொன்னியின் செல்வன் போஸ்டர்

Ponniyin Selvan : சோழர்களின் ஆட்சிக்காலம் குறித்து பிரபல எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள தகவலை, பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

  • Last Updated :

சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 1, செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திலிருந்து கேரக்டர்கள் அறிமுகம் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் பிற மொழிகளிலும் கூட அதிகமானபார்வையை பெற்றுள்ளது. மணி ரத்னம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த நடிகர் விக்ரம் - ஜி.வி.பிரகாஷ், கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி.. சுவாரஸ்யங்கள்

படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட 30க்கும் அதிகமான நடிகர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்!

இந்நிலையில் சோழர்களின் ஆட்சிக்காலம் குறித்து பிரபல எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள தகவலை, பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="772774" youtubeid="Utu07_I9YuA" category="cinema">

படத்தின் புரொமோஷன்களில் ஒன்றான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

' isDesktop="true" id="772774" youtubeid="LYMhbm2ORoc" category="cinema">

top videos

    விரைவில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலிருந்து பாடல்கள் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டீசரில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இதனால் பாடல்களை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

    First published:

    Tags: Ponniyin selvan