Home /News /entertainment /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் குழுவினரின் தஞ்சை பயணம் திடீர் ரத்து

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் குழுவினரின் தஞ்சை பயணம் திடீர் ரத்து

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர் புரொமோஷனுக்காக செல்லவிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் குழுவின் தஞ்சை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    பிரம்மாண்டமான வரலாற்று படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் நாளை முதல் புரொமோஷனுக்காக முன்னணி நட்சத்திரங்கள் பல இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் முதலில் கேரளாவுக்கு செல்லவிருக்கின்றனர். இதற்கிடையே சோழர்களின் தலைநகரான தஞ்சாவூருக்கு 'பொன்னியின் செல்வன்' குழுவினர் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூரைச் சேர்ந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர் புரொமோஷனுக்காக செல்லவிருக்கின்றனர். ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறவிருக்கின்றனர். அதே நேரத்தில் மணிரத்னம் படத்தின் இறுதி வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவர் இதில் கலந்துக் கொள்வதில்லை.

    வெற்றிமாறனின் விடுதலை மேக்கிங் ஸ்டில்ஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது, மேலும் படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நீளத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இப்படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. சில மணிநேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Ponniyin selvan

    அடுத்த செய்தி