ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

RRR, கே.ஜி.எஃப். 2 படங்களை விட பொன்னியின் செல்வனை பிரமாண்டமாக வெளியிட லைக்கா திட்டம்

RRR, கே.ஜி.எஃப். 2 படங்களை விட பொன்னியின் செல்வனை பிரமாண்டமாக வெளியிட லைக்கா திட்டம்

பொன்னியின்செல்வன் கேரக்டர்கள்

பொன்னியின்செல்வன் கேரக்டர்கள்

Ponniyin Selvan Grand Release : பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இன்னும் 80 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆர்.ஆர்.ஆர் -  கே.ஜி.எஃப்-2 ஆகிய படங்களை விட பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியிருக்கும்  அந்த டீசர்கள் 24 மணி நேரத்திற்குள்,  ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளன.

மேலும் டீசரை பார்க்கும் ரசிகர்கள் படம் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழகத்தை தாண்டி, மற்ற மாநிலங்களிலும் பிரமாண்டமாக வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தன் நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க - வட சென்னையில் நடைபெற்று வரும் ஏ.கே. 61 படப்பிடிப்பு… வைரலாகும் எச்.வினோத் ஃபோட்டோ…

அதிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர், யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 ஆகிய படங்களை விட பிரம்மாண்டமான முறையில் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.  அதற்கான வேலைகளில் இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார்.

' isDesktop="true" id="769436" youtubeid="LYMhbm2ORoc" category="cinema">

அதேசமயம் படத்தை பிரபலப்படுத்தும்  வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.  தற்போது டீசரை வெளியிட்டுள்ள படக்குழு அடுத்த கட்டமாக பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க - சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்...

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இன்னும் 80 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ponniyin selvan