ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் வெற்றி.. இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர்!

பொன்னியின் செல்வன் வெற்றி.. இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் வெற்றியடைந்திருக்கும் நிலையில் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து தயாரிப்பு நிறுவனத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் வெற்றியடைந்திருக்கும் நிலையில் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து தயாரிப்பு நிறுவனத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதிகம் எதிர்பார்க்கடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தத் திரைப்படத்தை எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக முதல் ஏழு நாட்களுக்கான முன்பதிவு அதிக அளவில் நடைபெற்றிருக்கிறது.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி குந்தவை த்ரிஷாவுக்கு இவ்வளவு ஸ்பெஷலா!

மேலும் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.  இந்த நிலையில் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஜி.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் ரெட் ஜெயண்ட்  நிறுவனத்தை சேர்ந்த செண்பகமூர்த்தி ஆகியோர் இயக்குனர் மணிரத்தினத்தை,  அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன் படம் அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு பெற்று இருக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படம் வெற்றி அடைந்திருப்பதால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் குழு என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Lyca, Mani rathnam, Ponniyin selvan