Home /News /entertainment /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடல் வெளியீடு அறிவிப்பு!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடல் வெளியீடு அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, யூடியூபில் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!



    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி