ஹோம் /நியூஸ் /entertainment /

வெளியானது ‘பொன்னியின் செல்வன்-1’ - ரசிகர்கள் உற்சாகம்!

வெளியானது ‘பொன்னியின் செல்வன்-1’ - ரசிகர்கள் உற்சாகம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ponniyin selvan : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். மேளதாளத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று அதிகாலை வெளியானது.

  கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை முதல் திரையரங்கில் குவிந்துள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர்.

  ஜெயம் ரவி

  பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி சென்னை வெற்றி திரையரங்கில் திரைப்படம் பார்த்தார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  ' isDesktop="true" id="811046" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

  பொன்னியின் செல்வன் பின்னணி இசை, பாடல்கள் குறித்து மணிரத்னம் பிரத்யேக பேட்டி….

  சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. தியேட்டர் வளாகத்தில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர்.

  கூல் சுரேஷ்

  மேலும் திரையரங்கிற்கு திரைப்படத்தைப் பார்த்து விமர்சனம் செய்ய வரும் கூல் சுரேஷ் இந்த முறை படம் பார்க்க குதிரையில் வந்தார். ’வெந்து தணிந்தது காடு PS -க்கு வணக்கத்தைப் போடு..’ என்ற கையில் பதாகையோடு கோயம்பேடு ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்த அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களை ஆரவாரத்தோடு உற்சாகமூட்டினார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Cinema, Ponniyin selvan