ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: சோழ சாம்ராஜ்ஜியத்திற்காக எதையும் செய்யும் குந்தவை!

Ponniyin Selvan: சோழ சாம்ராஜ்ஜியத்திற்காக எதையும் செய்யும் குந்தவை!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக த்ரிஷா

சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக நந்தினி செய்யும் சதித் திட்டங்களையும் முறியடிக்க பல முயற்சிகளை எடுப்பார் குந்தவை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்துள்ளனர்.

  சோழ சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரம் மிக்க பெண் குந்தவை. சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும், அருள்மொழிவர்மனின் மூத்த சகோதரியும் ஆவாள். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து பொன்னியின் செல்வனில் கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

  சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள் குந்தவை. வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதும் அவரின் ஆளுமையை காட்டுகிறது.

  தம்பி அருள்மொழிவர்மனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அவனை பழையாறைக்கு வர ஓலை அனுப்பும் குந்தவை, கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முன்கூட்டியே கணித்து அவரது பயணத்தைத் தடுக்க முயற்சித்திருப்பார். அதேபோல், சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக நந்தினி செய்யும் சதித் திட்டங்களையும் முறியடிக்க பல முயற்சிகளை எடுப்பார்.

  சோழர்களை பழிவாங்கும் நந்தினி... ஏன் தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சோழர் வரலாற்றில் இளவரசி குந்தவை அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் அதற்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அரண்மனை முடிவுகளில் குந்தவை முக்கியமான பங்காற்றுவார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Trisha, Mani ratnam, Ponniyin selvan