Home /News /entertainment /

Ratchasa Maamaney: பொன்னியின் செல்வன் ‘ராட்சஸ மாமனே’ லிரிக் வீடியோ வெளியீடு!

Ratchasa Maamaney: பொன்னியின் செல்வன் ‘ராட்சஸ மாமனே’ லிரிக் வீடியோ வெளியீடு!

ராட்சஸ மாமனே பாடல்

ராட்சஸ மாமனே பாடல்

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘ராட்சஸ மாமனே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது. 

    பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது.

    ஏற்கனவே, சோழா சோழா என்ற பாடலும், பொன்னி நதி பாடலும் வெளியாகியிருந்த நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் இசைவெளியீட்டு விழாவுக்குப் பிறகு கவனம் பெற்றன. குறுப்பாக ட்ரைலரில் ரஹ்மானின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் அதை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும்... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

    இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘ராட்சஸ மாமனே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் கபிலன் எழுதியுள்ள இப்பாடலை, ஷ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ராம் ஆகியோர் பாடியுள்ளனர்.



    பொன்னியின் செல்வன் ஆல்பத்தில் தனியிடத்தைப் பிடித்திருக்கும் இப்பாடலின் வீடியோவைக் காண ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi, Actress Trisha, Ponniyin selvan

    அடுத்த செய்தி