ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் வெளியான பின்னரும் வசூலை அள்ளிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்…

ஓடிடியில் வெளியான பின்னரும் வசூலை அள்ளிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்…

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

முதல்பாகமே மிகப்பெரும் வசூலை அள்ளியிருப்பதால், இதனை பின்னுக்கு தள்ளும் வகையில் அடுத்த பாகத்தின் வசூல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓடிடியில் வெளியான பின்னரும், பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலித்த கோடிகள் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதனை விஞ்சும் விதமாக படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும், நடிகர்கள் வெளிப்படுத்திய அட்டகாசமான நடிப்பும் இருந்ததால் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி?

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னைகளை எதிர்கொண்டு நேர்த்தியான முறையில் இந்த படத்தை உருவாக்கிய இயக்குனர் மணிரத்னத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஒட்டுமொத்தமாக 125 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டி.-யில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தப் படம் 5 மொழிகளில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஓடிடியில் பார்த்தாலும், தியேட்டர் அனுபவத்திற்காக இந்த படத்தின் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் வசூலும் தாறுமாறாக குவிந்துள்ளது. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ. 665 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் செல்ஃபீஸ்..!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்பாகமே மிகப்பெரும் வசூலை அள்ளியிருப்பதால், இதனை பின்னுக்கு தள்ளும் வகையில் அடுத்த பாகத்தின் வசூல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Ponniyin selvan