Home /News /entertainment /

ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியானது...

ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியானது...

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி

Ponni Nadhi PS 1 : பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை லைகாவுடன் இணைந்து மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின செல்வன் படத்திலிருந்து முதல் பாடலாக’பொன்னி நதி’ தற்போது வெளியாகியுள்ளது.

    பொன்னி நதி பாடலை கேட்டவுடனேயே பிடித்துப் போயுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து இந்த பாடலை ஏ.ஆர். ரைஹானா, பம்பா பாக்யா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளார்கள்.

    பொன்னி நதி பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். யூடியூபில் இந்த பாடல் Tips Tamil சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

    சிம்பிளான புடைவையில் அழகாய் ஜொலிக்கும் 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாள் நடிகை துஷாரா

    ‘நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்

    உளி சத்தம் கேட்டதுமே கல்பூத்து நிற்கும்

    பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும்

    சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிற்கும்’ என இந்த பாடல் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பொன்னி நதி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாடலைப்பார்க்க...



    பாடல் வரிகளும், இசைப்புயலின் குரல் தங்களை சோழர் காலத்துக்கே கொண்டு செல்வதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை பாடியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை லைகாவுடன் இணைந்து மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்து பங்கேற்ற நித்யா மேனன்

    படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Ponniyin selvan

    அடுத்த செய்தி