ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

8 ஆம் நூற்றாண்டு பொன்னியின் செல்வனில் 21 ஆம் நூற்றாண்டு பொருள்கள்!

8 ஆம் நூற்றாண்டு பொன்னியின் செல்வனில் 21 ஆம் நூற்றாண்டு பொருள்கள்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியில் செல்வனில் இடம்பெற்றுள்ள அரங்குகள், உடைகள் தமிழகத்தில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் வெளியாகி அமோக வரவேற்புடன்  தியேட்டர்களில் ஓடுகிறது. தமிழகத்தில் குடும்பம் குடும்பமாகச் சென்று படத்தை பார்க்கிறார்கள். வார நாள்களிலும் கூட்டம் குறையவில்லை. இப்போது விடுமுறை என்பதும் ஒரு காரணம்

.பல நூறு கோடிகள் செலவில் பொன்னியின் செல்வன் எடுக்கப்பட்டிருக்கிறது. சோழர் வரலாறை, சோழர்களின் போர்த் திறனை, அவர்களின் பெருமையை பொன்னியின் செல்வன் உலகெங்கும் எடுத்துச் செல்லும் என்றார் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் ஜெயமோகன். சோழர்கள் பெருமையை உலகறியச் செய்வதற்காகத்தான்  பொன்னியின் செல்வனை மணிரத்னம் எடுத்தாரா?  என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இந்தப் படம் தமிழ் சினிமாவின் உயரத்தை உலகுக்கு சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்தபட்சம் இந்திய அளவில் பொன்னியின் செல்வனின் தரம் பேசப்படும்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மயங்கிக் கிடந்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ்.. தற்கொலைக்கு காரணம் என்ன?

பொன்னியில் செல்வனில் இடம்பெற்றுள்ள அரங்குகள், உடைகள் தமிழகத்தில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. 8 ஆம் நூற்றாண்டு கதையை படமாக்கும் போது, அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கிற பொருள்களை பயன்படுத்த வேண்டும். தற்கால பொருட்களைப் பயன்படுத்தினால் அது படத்தின் தோல்வியாகிவிடும். உடையலங்காரத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது.

படத்தில் வரும் நடிகர்களின் கை கவசத்தில் தோலால் ஆன சுருக்குக் கயிறை பயன்படுத்தியிருக்க வேண்டும். சுருக்குக் கயிறுக்குப் பதில் இந்தக் கால தோள் மற்றும் முதுகுப் பைகளில் பயன்படுத்தப்படும் பக்கிள்ஸை பயன்படுத்தியிருக்கிறார்கள். ரிவிட் உப்யோகித்து கை கவசத்துடன் இணைத்திருப்பதையும் பார்க்கலாம். இவையெல்லாம் எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து புழக்கத்துக்கு வந்தவை. படத்தில் பயன்படுத்தியிருப்பவை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருப்பவை.

தீபாவளி ரிலீஸ் போட்டியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் !

படம் பார்க்கையில் இது உறுத்தப் போவதில்லை என்றாலும், பொன்னியின் செல்வன் விருதுத் தேர்வுக்கு செல்லும் போது இந்த பக்கிள் காரணமாகவே உடையலங்காரத்துக்கான விருது நிராகரிக்கப்படலாம். இந்த பக்கிள் விவகாரத்தை கவனத்தில் கொண்டு வந்த பிலாக்கர் கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன், பக்கிள்ஸின் முதல் வடிவம் 14 ஆம் நூற்றாண்டு ரோமில் கண்டுபிடிக்கப்பட்டு  பயன்பாட்டுக்கு வந்ததாக குறிப்பிடுகிறார். அதாவது பொன்னியின் செல்வன் கதை நடந்து சுமார் 500 - 600 வருடங்களுக்குப் பிறகு. ஹாலிவுட் ட்ராய் திரைப்படத்தில் அக்கிலீஸாக வரும் பிராட் பிட்டின் கை கவசத்தில் சுருக்குக் கயிறு பயன்படுத்தியிருப்பதையும் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் இரு பாகங்களையும் 150 தினங்களில் மணிரத்னம் எடுத்து முடித்ததாக ஜெயம் ரவி ராஜமௌலியிடம் சொன்ன போது அவர் ஆச்சரியப்பட்டாராம். பாகுபலியின் ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்கவே அவர்கள் பல மாதங்கள் செலவிட்டனர். பொன்னியின் செல்வனின் ஆடை வடிவமைப்பாளர் பக்கிள்ஸை பயன்படுத்தி அந்த நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களைவிட மணிரத்னத்தின் படம் யதார்த்தபூர்வமாக  மேம்பட்டது. பக்கிள் போன்ற சின்னஞ்சிறு விஷயங்களிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: AR Rahman, Kollywood, Mani rathnam, Ponniyin selvan, Tamil Cinema