ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுத்து என்ன? பொன்னியின் செல்வன் நாவலைத் தேடும் 2k கிட்ஸ்! அதிகரிக்கும் டவுன்லோட்ஸ்!

அடுத்து என்ன? பொன்னியின் செல்வன் நாவலைத் தேடும் 2k கிட்ஸ்! அதிகரிக்கும் டவுன்லோட்ஸ்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலின் இபுக்ஸ் டவுன்லோட் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்போவதாக அறிவிப்பு வெளியான நொடி முதலே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது. வெறும் எதிர்பார்ப்பு மட்டுமின்றி நாவல் படித்த பலருக்கும் சந்தேகம்தான் முதலில் வந்தது. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்ய காட்சிகளை கொண்டிருக்கும் நாவலை திரையில் காட்சிகளாக இரண்டரை மணி நேரத்துக்குள் கொண்டு வர முடியுமா? முழு நாவலை படமாக்க வேண்டுமென்றால் சினிமாவில் எடுக்கப்படும் இரண்டு பாகங்கள் மட்டுமே கைகொடுக்குமா? நாவலின் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிப்படுத்த முடியுமா என்றெல்லாம் தொடர்ந்த சந்தேகங்களை ஒருவழியாக சமாளித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுவிட்டார் மணிரத்னம்.

  Ponniyin Selvan actress, Ponniyin Selvan actress list, பொன்னியின் செல்வன் நடிகைகள், Ponniyin Selvan vikram, Ponniyin Selvan karthi, Ponniyin Selvan jayam ravi, Ponniyin Selvan trisha, Ponniyin Selvan aishwarya rai, பொன்னியின் செல்வன் படங்கள், பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி, பொன்னியின் செல்வன் விக்ரம், பொன்னியின் செல்வன் கார்த்தி, Ponniyin Selvan shooting spot pictures, Ponniyin Selvan aishwarya rai, maniratnam, mani ratnam ponniyin selvan, maniratnam ponniyin selvan release, மணிரத்னம், மணிரத்னம் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி, ponniyin selvan new poster, ponniyin selvan movie, ponniyin selvan jayam ravi, ponniyin selvan trisha, பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி,
  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்

  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. தொடங்கியது முதலே பரபரவென ஷூட்டிங் சென்ற நிலையில் வெறும் 150 நாட்களில் படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வந்தார் மணி ரத்னம். படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க விளம்பரப்படுத்துவதிலும் படக்குழு கவனத்தை செலுத்தியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மணி ரத்னம், ஏ.ஆர். ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்பத்தினர். படம் வெளியாகி 3நாட்கள் கடந்துவிட்ட நிலையில் வசூலில் ரூ.200கோடியை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன்.

  படத்துக்கு ஒரு பக்கம் கடுமையான வரவேற்பு என்றாலும் நாவலை வரிக்கு வரி வாசித்து பொன்னியின் செல்வனிலேயே மூழ்கிய ஆட்கள் பலருக்கு படம் ஒரு வித ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. சோஷியல் மீடியாவில் பலரும் புலம்பித்தவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க பொன்னியின் செல்வன் என்று நாவல் இருக்கிறதா என்று ஷாக்கான 2கே கிட்ஸ் பலரும் அந்த நாவலை தேடத்தொடங்கி இருக்கின்றனர். படம் சூப்பர் ஆனால் அந்த நாவல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், அடுத்த பாகம் வரை காத்திருக்க முடியாது என்ற எதிர்பார்ப்பும்தான் 2கே கிட்ஸ்கள் மத்தியில் நாவல் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அந்த ஆர்வம் இபுக்ஸ் என்ற மின் புத்தகம் பதிவிறக்கத்தில் எதிரொலித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் பொன்னியின் செல்வம் மின் புத்தகம் 2 லட்சம் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் மீதான ஆர்வமே மீண்டும் நாவலை நோக்கி வாசகர்களை இழுக்கத்தொடங் கியுள்ளதாக புத்தகப்பிரியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆர்வம் இளம் வாசகர்களை ஒரு நல்ல புத்தக பிரியர்களாக மாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Ponniyin selvan