ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய ட்விஸ்ட்.. கவனிக்காமல் விட்ட ரசிகர்கள்!

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய ட்விஸ்ட்.. கவனிக்காமல் விட்ட ரசிகர்கள்!

இந்த காட்சி த்ரிஷாவை தவிர்த்து மற்றவர்களை கவனித்தீர்களா?

இந்த காட்சி த்ரிஷாவை தவிர்த்து மற்றவர்களை கவனித்தீர்களா?

‘ராட்சச மாமனே’ பாடல் காட்சியில் தாயார் செம்பியன்மாதேவியை, சேந்தன் அமுதன் பாசத்துடன் பார்ப்பார். ஆனால் ரசிகர்கள் பார்த்தது என்னவோ த்ரிஷாவை மட்டும்தான்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குந்தவையான நடிகை த்ரிஷாவை அதிகம் கவனித்தால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் முக்கியமான ட்விஸ்டை, பாடல் காட்சியில் கவனிக்க மறந்து விட்டனர். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்…

  பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராட்சச மாமனே’ என்ற பாடல், குந்தவையான த்ரிஷாவின் அறிமுக காட்சியாக அமைந்திருக்கும். இந்த பாடலில் கம்சன் வேடமணிந்து வந்தியதேவன் கார்த்தி நடனமாடுவார்.

  அவர்தான் ஒற்றனாக வந்து தஞ்சை அரண்மனை மற்றும் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் கலகத்தை ஏற்படுத்தியவரோ என்ற சந்தேகத்தில், அவரை த்ரிஷா உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

  பாலிவுட்டிற்கு செல்லும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்… விரைவில் அறிவிப்பு

  இந்த காட்சியின்போது சேந்தன் அமுதனாக வரும் அஸ்வின், த்ரிஷா மற்றும் செம்பியன்மாதேவியை சந்தித்துப் பேசுவார். பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் ரசிகர்கள் த்ரிஷா மீது காட்டிய ஆர்வத்தால், இந்த காட்சி அதிகம் பேசப்படாமல் போனது.

  அதாவது செம்பியன் மாதேவிக்கும் சேந்தன் அமுதனுக்கும் முக்கிய நெருக்கமான தொடர்பு உண்டு. நாவல் படித்தவர்களுக்கு இந்த விவரம் தெரிந்தாலும் நாவல் படிக்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அரண்மனையில் வசிக்காமல் சிவபெருமானுக்கு சேவை செய்பவராக இருந்து வரும் சேந்த அமுதன் பொன்னியின் செல்வன் கதைப்படி முக்கிய நபராக இரண்டாம் பாதியில் வருவார்.

  தமிழ்நாடு மக்களை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பேசிய ’நானே வருவேன்’ நடிகை!

  ராட்சச மாமனே பாடல் காட்சியில் தாயார் செம்பியன்மாதேவியை, சேந்தன் அமுதன் பாசத்துடன் பார்ப்பார். ஆனால் ரசிகர்கள் பார்த்தது என்னவோ த்ரிஷாவை மட்டும்தான். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் இந்த காட்சியை ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்கள் கவனிக்க மறந்த முக்கியமான காட்சி என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

  ' isDesktop="true" id="823883" youtubeid="IjvQeKQRfIk" category="cinema">

  இதனை ரீட்வீட் செய்த சேந்தன் அமுதனாக நடித்த அஸ்வின், ‘எல்லோரும் குந்தவையை பார்ப்பதில் பிஸியாக இருந்துவிட்டார்கள். இதனால் என்னையும் செம்பியன்மாதேவியையும் பார்க்க வாய்ப்பில்லை’ என்று கிண்டலாக கூறியிருந்தார்.

  பொன்னியின் செல்வன் நாவலின்படி சுந்தர சோழனாக படத்தில் வரும் பிரகாஷ்ராஜுக்கு பின்னர் சோழநாட்டை அடுத்த 15 ஆண்டுகள் ஆளப்போவது யார்?   சேந்தன் அமுதன் ஏற்படுத்தப்போகும் ட்விஸ்ட் என்ன என்பதை அடுத்தப்பாகம் நிச்சயம் விடை தரும்.

  Published by:Musthak
  First published:

  Tags: Ponniyin selvan