ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

ரஜினி படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன், ரஜினி

பொன்னியின் செல்வன், ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் -  இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் லைகா நிறுவனம் தயாரித்த 2.0 திரைப்படம் அமெரிக்காவில் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக எடுத்திருந்தது. அதாவது 55 லட்சம் அமெரிக்க டாலர்களை 2.0 திரைப்படம் வசூலித்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவில் ரஜினியின் 2.0 படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் -  இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் லைகா நிறுவனம் தயாரித்த 2.0 திரைப்படம் அமெரிக்காவில் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக எடுத்திருந்தது. அதாவது 55 லட்சம் அமெரிக்க டாலர்களை 2.0 திரைப்படம் வசூலித்தது.

இதற்குப் பிறகு எந்த திரைப்படமும் அமெரிக்காவில் அந்த அளவிற்கான வசூலை செய்யவில்லை.  இதனால் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை 2.0 தன்வசம் வைத்திருந்தது.

இந்த நிலையில் 2.0 படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முதல் பாகம் முறியடித்துள்ளது. அந்த திரைப்படம் முதல் 10 நாட்களில் மட்டும், அமெரிக்காவில் 55 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.

Also read... கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா... அழகில் ஜொலிக்கும் ஹூமா குரேசி!

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக 2.0 வசம் இருந்த அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது.

இந்தப் படம் வெளியாகி 10 நாட்கள் தான் ஆகுகிறது என்பதால்,  இன்னும் அதிகமான வசூலை பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 2.0 movie, Ponniyin selvan, Rajini Kanth