Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடும் பணிகள் மும்முரம்… ஃபாரின் ரிலீசுக்கான வர்த்தகம் நிறைவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடும் பணிகள் மும்முரம்… ஃபாரின் ரிலீசுக்கான வர்த்தகம் நிறைவு

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் போஸ்டர்

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் போஸ்டர்

படத்தின் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வியாபார பணி வேகமாக நடைபெற்று வருகின்றன.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவார்கள்  நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப்  படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    அத்துடன் படத்தின் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார்.  இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    அதில் முதல் கட்டமாக வெளிநாட்டு வெளியீட்டிருக்கான வியாபாரங்களை லைகா நிறுவனம் முடித்துள்ளது.

    தமிழகத்தில் அதிக திரையரங்களில் 50 தினங்கள் ஓடிய மலையாள திரைப்படம்!

    அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும்,  கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனமும், Night ED Films நிறுவனமும்,  ஐரோப்பாவில் Boleyn நிறுவனமும், மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும் வெளியிடுகின்றன.

    பொன்னியின் செல்வன் ஆசிரியருக்கு புகழாரம் சூட்டிய படக்குழுவினர்…

    அதேபோல் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. அதேபோல் சிங்கப்பூரில் Home Screen நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர்.



    சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி