Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் டிஜிட்டல் வெளியீட்டு உரிமம் மிகப்பெரும் தொகைக்கு விற்பனை… எத்தனை கோடிகள் தெரியுமா?

பொன்னியின் செல்வன் டிஜிட்டல் வெளியீட்டு உரிமம் மிகப்பெரும் தொகைக்கு விற்பனை… எத்தனை கோடிகள் தெரியுமா?

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் வெளியீட்டையொட்டி அவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • ta
பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. இம்மாதம் 30 ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் வெளியானது… விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் ரிசர்வேஷன்

இதையொட்டி இறுதிகட்ட பணியில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 125 கோடி ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கான உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேபோன்று இந்த படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையும் மிகப்பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதேபோன்று பொன்னியின் செல்வன் படத்தை மற்ற மாநிலங்களில் வெளியிடும் விநியோகஸ்தர்கள், வெளிநாடுகளில் வெளியிடும் வினியோகஸ்தர்கள் விவரத்தை படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் வெளியீட்டையொட்டி அவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம் ரவி…

முன்னதாக படத்திற்கான விளம்பர பணிகளில், படத்தில் இடம் பெற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். 2 பாகங்களாக இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முதல் பாகம் இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது.
Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan

அடுத்த செய்தி