ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Exclusive: பொன்னியின் செல்வன் குறித்து இயக்குநர் மணிரத்னம் பகிர்ந்த ருசீகர தகவல்கள்

Exclusive: பொன்னியின் செல்வன் குறித்து இயக்குநர் மணிரத்னம் பகிர்ந்த ருசீகர தகவல்கள்

மணிரத்னம்

மணிரத்னம்

ponniyin selvan mani ratnam interview: பொன்னியின் செல்வன் பட இயக்குனர் மணிரத்னம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பொன்னியின் செல்வன் பட இயக்குனர் மணிரத்னம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி

  கேள்வி : பொன்னியின் செல்வம் மீதான உங்களின் காதல் எப்போது தொடங்கியது?

  பதில் : ரொம்ப பழசு. லாயிட்ஸ் சாலையில் உள்ள ஈஸ்வரி லைப்ரரியில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தேன். மீண்டும் மீண்டும் படிக்க தோன்றியது. கல்கி எழுதிய விதம் தத்ருமாக இருந்தது. இதை படமாக இயக்கியது மகிழ்ச்சி.

  கேள்வி : 5 பாகங்கள் கொண்ட கதையில் தற்போது 2 பாகங்கள் மட்டும் தான் எடுத்துள்ளீர்களா?

  பதில்:5 பாகங்களையும் 5 படங்களாக எடுத்திருக்க முடியும். இல்லையென்றால் வெப் சீரிஸாக எடுத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் 2 பாகங்களிலேயே கதைகளை அழகாக சொல்லியிருக்கிறோம்.

  கேள்வி : பொன்னியின் செல்வன் நாவலை முதல்முறை வாசித்தபோது உங்களை ஈர்த்த கதாபாத்திரம் எது?

  பதில்: ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு கேரக்டரை பிடித்தது. முதல்முறை வந்தியதேவன். பிறகு எல்லோரையும் பிடித்தது. குந்தவை மீது பெரிய அபிப்ராயம் இருந்தது. கல்கி அனைத்து கதாபாத்திரங்களையும் செதுக்கியிருக்கிறார்.

  கேள்வி: நாவலை எத்தனை முறை படித்துள்ளீர்கள்?

  பதில்: 3, 4 முறை படித்துள்ளேன்.

  கேள்வி: பள்ளியில் படித்தபோதும் படமாக இயக்கியபோதும் வந்த அனுபவம் எப்படி இருந்தது?

  பதில்: கல்கியின் ரசிகனாக மாறி படத்தை இயக்கினேன். சினிமாவுக்காகவே எழுதப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன்.

  கேள்வி: பொன்னியின் செல்வன் பற்றி முன்னரே பேசியுள்ளீர்களா?

  பதில்: என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து கல்கி கதை எழுதியிருக்கிறார். அதனை 70 ஆண்டுகளுக்கு முன்பு கதையாக எழுதி இருக்கிறார். ஆனால் இன்றுவரை அவர் எழுதிய சம்பவங்கள் இந்த காலத்து சூழலுக்கும் பொருந்துகிறது. அவர் நாவலில் குறிப்பிட்ட அரசியல், இந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

  ' isDesktop="true" id="810962" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

  கேள்வி: 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த  தலைமுறைக்கு புரியும்படி கதைக்களம் இருக்குமா?

  பதில்: 1000 வருடத்துக்கு முன் நடந்த கதையை 70 வருடத்துக்கு முன் 5 பாகங்களாக எழுதியுள்ளார் கல்கி . இது இந்த காலத்துக்கு ஏற்ற படம்தான். இந்த படம் எப்போது எடுத்தாலும் அனைவருக்கும் புரியும்.

  கேள்வி: நாவலை திரைப்படமாக இயக்கியது சவாலாக இருந்ததா?

  பதில்: இல்லை நேர்த்தியாக புத்தகத்தில் உள்ளது போல் தான் படத்தையும் இயக்கினேன்.

  கேள்வி: கல்கியின் ரசிகனாக படத்தை எடுத்துள்ளீர்களா?

  பதில்: ஆமாம். கண்டிப்பாக இன்றும் நான் கல்கியின் ரசிகன்தான். அது ஒரு சிறப்பு நாவல்.

  கேள்வி: பொதுவாக உங்களது படத்தின் வசனம் சுருக்கமாக இருக்கும் இந்த படத்தில் எப்படி?

  பதில்: இந்த படத்துக்கு பெரிய சவாலே வசனம் தான். வசனத்திற்கு ஜெயமோகன் இயல்பாக பேச உதவிபுரிந்தார். அதனால் அனைவருக்கும் சுலபமாக இருந்தது.

  கேள்வி: இந்த படத்தில் நிறத்தின் இயல்பு என்ன?

  பதில்: கல்கி எழுதியதில் நிறத்தை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப படத்தை இயக்கியுள்ளோம்.

  கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் படத்தை எடுத்தது சரியான முடிவா?

  பதில்: பொன்னியின் செல்வன் எப்போது எடுத்தாலும் அதற்கு சரியான காலகட்டம்தான். இயல்பாக எடுக்கப்பட்ட படம்தான்.

  கேள்வி: ரஜினி மற்றும் கமல் விரும்பியும் நீங்கள் நிராகரித்தது ஏன்?

  பதில்: ரஜினி மற்றும் கமலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் கல்கியின் மீது உள்ள மரியாதை, பொன்னியின் செல்வன் நாவலின் மீதுள்ள மரியாதையால் தாங்களும் படத்தில் இடம்பெற வேண்டும் என்று கூறினார்கள்.

  கமல், ரஜினியை படத்தில் இடம் பெற வைக்கலாம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் காட்சிகளை அவர்களுக்கு வைக்கவேண்டும். இருவருக்கும் ஏற்ற காட்சிகள், இல்லாததால் படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை.

  கேள்வி: இந்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்தது சவாலாக இருந்ததா?

  பதில்: முன்னதாக படத்தை திட்டமிட்டோம்.  அனைவரிடமும் கலைந்துரையாடினோம். அதனால் சுலபமாக இருந்தது.

  கேள்வி: படத்தில் ஆடை மற்றும் ஆயுதங்கள் விஷயத்தில் தேர்வு செய்தது எப்படி?

  பதில்: பொன்னியின் செல்வனை படிக்கும் போது தான் தெரிகிறது கல்கி எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டு இந்த நாவலை படைத்து இருக்கிறார் என்று. இந்த படத்திற்காக உடை, தோற்றம் உள்ளிட்ட பல அம்சங்களை நாங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.  இது தொடர்பாக வல்லுனர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டோம்.

  கேள்வி: சோழர்களின் காலகட்டங்களை அறிய சவாலாக இருந்ததா?

  பதில்: கண்டிப்பாக சவாலாக இருந்தது.

  கேள்வி: புத்தகத்தை காட்சி வடிவில் எடுக்க சிரமப்பட்டீர்களா?

  பதில்: ஆமாம். கல்கியின் கதையை மீறி சில காட்சிகள் கற்பனையாக எடுக்கப்பட்டது.

  கேள்வி: திரைப்படம் எந்த ரீதியிலான வெற்றியாக இருக்கவேண்டும் என நினைக்கிஙீர்கள்?

  பதில்: எல்லாவிதமான வெற்றியாக இருக்க வேண்டும். முக்கியமாக வணிக ரீதியான வெற்றியாக இருக்க வேண்டும்.

  கேள்வி: பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை மிஸ் செய்தீர்களா?

  பதில்: வைரமுத்து ஏன் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்று கேட்கிறார்கள். வைரமுத்து கூட பணியாற்றினால் மட்டுமல்ல, யாருடன் பணியாற்றினாலும் ஒரே மாதிரியான உழைப்பு தான் இருக்கும்.

  வைரமுத்து யாருடன் பணியாற்றினாலும் ஒரே மாதிரியான உழைப்பு தான் இருக்கும். நான் யாருடன் பணியாற்றினாலும் அதை உழைப்புதான். அதேபோன்றுதான் ரஹ்மானும்.

  பொன்னியின் செல்வன் படத்தில் திறமை மிக்க பல தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.  பி.சி. ஸ்ரீராம் உடன் படம் பண்ணியபோது ஒருவிதமான அனுபவம் கிடைத்தது. அதன்பின்னர், சந்தோஷ் சிவனுடன் படத்தில் இணைந்தேன். புதிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணையும்போது, படத்தில் புதிய பரிணாமம் கிடைக்கிறது.

  தமிழ் கவிதைக்கு நாட்டில் பல திறமை மிக்கவர்கள் உள்ளார்கள். எனவே புதியவர்களை கொண்டுவருவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

  பாடலாசிரியர் இளங்கோவின் கவிதைகளை படித்துள்ளேன். இதுதொடர்பாக ஜெயமோகனுடனும் பேசியுள்ளேன். அவர்தான் இளங்கோ நல்ல தமிழ்புலமை வாய்ந்தவர் என்று கூறினார். அவருடன் முதல் பாடலை பண்ணும்போதே இவர் தமிழ் புலமை, சொல்லாடலில் திறமை மிக்கவர் என்று எனக்கு தெரிந்து விட்டது.

  கேள்வி: ரசிகர்கள் படத்தை எப்படி அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  பதில்: அவர்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி எடுத்துகலாம். இதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் செய்ய தேவையில்லை. நாவலை படித்தவர்களுக்கும் புரியும்படி இருக்க வேண்டும் படிக்காதவர்களுக்கும் எளிமையாக புரியும்படி இருக்க வேண்டும் .

  கேள்வி: இயக்குநர் திரு.ஷங்கர் கூறியது போல் பான் இந்தியா இயக்குநர் என்றால் நீங்கள்தான். இந்த படத்தை பான் இந்தியா படமாக இயக்கும்போது மண் சார்ந்த விசயங்களில் சமரசம் செய்ய வேண்டியிருந்ததா?

  பதில்: படம்  செய்யும்போது பான் இந்தியா படமாக நினைக்கவில்லை. படம் எவ்வளவுக்கு எவ்வளவு மண் சார்ந்து உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு சர்வதேசம் வாய்ந்ததாக இருக்கும். சத்யஜித் ரே எடுத்த பெங்கல் கிராமத்தின் கதை உலகம் முழுவதும் போய் சேர்ந்துள்ளது. எனவே மண் சார்ந்து இருப்பதுதான் சிறந்தது.

  இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Ponniyin selvan