Home /News /entertainment /

‘அரண்மனைக்குள் ஸ்மார்ட் ஆண்களுக்கு அனுமதியில்லை’ - கார்த்திக்கு த்ரிஷா பதில்

‘அரண்மனைக்குள் ஸ்மார்ட் ஆண்களுக்கு அனுமதியில்லை’ - கார்த்திக்கு த்ரிஷா பதில்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா

Ponniyin Selvan 1 - நாளை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    லொகேஷன் அனுப்புங்க என்று கலாய்த்த பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்திக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் குந்தவையான த்ரிஷா.

    தமிழில் பிரமாண்ட வரலாற்றுப் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன், வெள்ளித் வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. பொன்னியின் செல்வனை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்கள், இந்தத் திரைப்படத்தை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

    நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், கடந்த 4 நாட்களாக படக்குழுவினர், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்து வருகின்றனர்.

    90’ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்?

    தற்போது வரை ஆதித்ய கரிகாலன் (விக்ரம்), வந்தியத்தேவன் (கார்த்தி), நந்தினி (ஐஷ்வர்யா ராய்) மற்றும் குந்தவை (த்ரிஷா) ஆகிய கேரக்டர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் கதைப்படி, அண்ணன் ஆதித்த கரிகாலன் அளிக்கும் ஓலை எனப்படும் கடிதத்தை அவரது தங்கை குந்தவையான திரிஷாவிடம் வந்தியத்தேவன் (கார்த்தி) அளிக்க வேண்டும்.



    இந்நிலையில் த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கார்த்தி, இளவரசி… உங்க லொகேஷனை அனுப்புங்க… உங்கள் அண்ணனின் ஓலையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியிருந்தார்.

    ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?

    இதற்கு குந்தவையான த்ரிஷா அளித்திருக்கும் பதில் வைரலாகியுள்ளது. த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள பதிவில், மன்னிக்கவும், அரண்மனைக்குள் ஸ்மார்ட் போனுக்கும், ஸ்மார்ட்டான நபர்களுக்கும் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார்.



    பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

    நாளை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி