Home /News /entertainment /

Ponniyin Selvan: அலுப்புக்கு மத்தியில் இளவரசர் கரிகாலனின் கட்டளையை ஏற்ற வந்தியத்தேவன்!

Ponniyin Selvan: அலுப்புக்கு மத்தியில் இளவரசர் கரிகாலனின் கட்டளையை ஏற்ற வந்தியத்தேவன்!

விக்ரம் - கார்த்தி

விக்ரம் - கார்த்தி

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் புரொமோஷனுக்காக விக்ரமுடன் தஞ்சைக்கு வர ஒப்புக்கொண்டுள்ளார் கார்த்தி.

    பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது.

    படத்தின் பாடல்களும், ட்ரைலரில் ரஹ்மானின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் அதை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

    இதற்கிடையே, “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என ட்விட்டரில் பதிவிட்டிருந்த விக்ரம், அந்த பதிவில் கார்த்தி, த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியை டேக் செய்திருந்தார்.



    அதற்கு, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என சில தினங்கள் முன்பு பதிலளித்திருந்தார் கார்த்தி.

    ரசிகையாக இருந்து பெருமைமிகு மனைவியானேன் - ரவீந்தர் குறித்து மகாலட்சுமி நெகிழ்ச்சி!

    அவரின் அந்த ட்வீட்டுக்கு, “சரி தான். ‌இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். See you on the other side வந்தியத்தேவா” எனத் தெரிவித்திருந்தார் விக்ரம்.



    தற்போது அதற்கு பதிலளித்திருக்கும் கார்த்தி, “என்னுடைய பாதுகாப்பு இல்லாமல் உங்களை எங்கும் அனுப்ப முடியாது இளவரசே. அலுப்பாய் இருந்தாலும் நானும் வந்தே தீருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    செந்தமிழில் உரையாடும் இவர்களின் ட்வீட்டுகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi, Actor Vikram

    அடுத்த செய்தி