ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: முதல் நாள் வசூலில் சாதனை படைக்க தயாராகும் பொன்னியின் செல்வன்!

Ponniyin Selvan: முதல் நாள் வசூலில் சாதனை படைக்க தயாராகும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் சிறு நகரங்களிலும் முன்பதிவு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்த திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் வசூலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, கமல்ஹாசன் நடித்த விக்ரம், விக்ரம் நடித்த கோப்ரா, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்கள் என்ற பட்டியலில் உள்ளன.

2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பட்டியல் பொன்னியின் செல்வன் வெளியீட்டுக்கு பிறகு மாற வாய்ப்புள்ளதாகவும் திரைத்துறை வர்த்தகர்கள் கூறுகின்றனர். முதல் ஐந்து இடத்தில் பொன்னியின் செல்வன் நிச்சயம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கின்றனர்.  இதனால் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் தவிர, வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான முன்பதிவு பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Ponniyin selvan