Home /News /entertainment /

‘பொன்னியின் செல்வன் நம் படம், தமிழர்கள் படம்’ – பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி எமோஷனல்…

‘பொன்னியின் செல்வன் நம் படம், தமிழர்கள் படம்’ – பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி எமோஷனல்…

பொன்னியின் செல்வன் முதல் பாடல்  வெளியீட்டு விழாவில் கார்த்தி.

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின செல்வன் படத்திலிருந்து முதல் பாடலாக’பொன்னி நதி’ தற்போது வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில், ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி,  பொன்னியின் செல்வன் நம் படம்! தமிழர்கள் படம்!! என கூறினார். இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் படம் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாடலை இடம்பெறும் பொன்னி நதி, இன்று காவிரி நதியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியாது என அனைவரும் கூறினார்கள்.  அதேபோல் படம் ஆரம்பித்ததும் கொரோனா வந்தது.  இருந்தாலும் மணிரத்னம் முடிப்பார் என அனைவரும் நம்பினோம். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 120 நாட்களில் படமாக்கி முடித்து விட்டோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியானது...

பொன்னி நதி பாடல் மூலம் இளங்கோ என்ற புதியவருக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்துள்ளார்.  அந்தப் பாட்டை கேட்கும் பொழுது சோழ நாட்டுக்குள்போன உணர்வு இருந்தது என கார்த்தி கூறினார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னியின செல்வன் படத்திலிருந்து முதல் பாடலாக’பொன்னி நதி’ தற்போது வெளியாகியுள்ளது.

பாடலைப் பார்க்க...



பொன்னி நதி பாடலை கேட்டவுடனேயே பிடித்துப் போயுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து இந்த பாடலை ஏ.ஆர். ரைஹானா, பம்பா பாக்யா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளார்கள்.

பொன்னி நதி பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். யூடியூபில் இந்த பாடல் Tips Tamil சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை லைகாவுடன் இணைந்து மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Karthi, Ponniyin selvan

அடுத்த செய்தி