ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘நாவலை அப்படியே படமாக்கினால் அது டாக்குமெண்டரி போல் ஆகிவிடும்’ – பொன்னியின் செல்வன் சுவாரசியத்தை விளக்கும் மணிரத்னம்

‘நாவலை அப்படியே படமாக்கினால் அது டாக்குமெண்டரி போல் ஆகிவிடும்’ – பொன்னியின் செல்வன் சுவாரசியத்தை விளக்கும் மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம்

வர்த்தக ரீதியில், விமர்சன ரீதியில் இந்தப் படம் வெற்றியாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற படைப்புகள் மீண்டும் உருவாகும். – மணிரத்னம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே படமாக்கினால் அது டாக்குமென்டரில் போல் ஆகி விடும் என்றும், படத்தை நன்றாக ரசிக்கும் வகையில் உருவாக்கியிருப்பதாகவும் இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.

நாவலில் இடம்பெற்ற அம்சங்கள் அனைத்தும் படத்தில் இருக்குமா என சிலர் எதிர்பார்த்து வரும் நிலையில் மணிரத்னம் தனது படத்தின் சுவாரசியங்களை விவரித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது-

பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதற்கு முன்பாக அது தொடர்பான அனைத்து இடங்களுக்கும் நாங்கள் சென்றோம். எல்லா கோவில்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்து ஆய்வு எடுத்துதான் படத்தை ஆரம்பித்தோம்.

பொன்னியின் செல்வன் படத்தை நாங்கள் உருவாக்குவது என்பது ஆவணத்திற்காக அல்ல. இதில் கற்பனையும், உண்மை சம்பவங்களும் உண்டு. பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த வரை அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்தையும் படத்தில் கொண்டுவர முயற்சி செய்துள்ளோம்.

பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு சவாலாக இருந்தது இந்த விஷயம்தான்… விவரிக்கும் மணிரத்னம்

நாவலை அப்படியே எடுத்துவிட்டால்  அது டாக்குமெண்டரி போல் ஆகிவிடும். அதனால் இங்கு கற்பனையும் கலந்து படத்தை உருவாக்கியுள்ளோம்.

' isDesktop="true" id="811026" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

பொன்னியின் செல்வன் என்னுடைய கனவு. நான்படித்ததில் இருந்தே இதை படமாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கு படமாக்கியதில் மிகவும் சந்தோஷம்.

வர்த்தக ரீதியில், விமர்சன ரீதியில் இந்தப் படம் வெற்றியாக வேண்டும். இவ்வளவு பெரிய பொருட் செலவில் படம் உருவாக்கப்படும் போது வர்த்தக ரீதியில் வெற்றி கிடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற படைப்புகள் மீண்டும் உருவாகும்.

பொன்னியின் செல்வன் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன? மணிரத்னம் பிரத்யேக பேட்டி

விமர்சன ரீதியான வெற்றி என்பது படைப்பாளருக்கான வெற்றி. அதையும் எதிர்பார்க்கிறேன். நான் தேர்வு செய்த அனைத்து கேரக்டர்கள், நடிகர்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Mani ratnam, Ponniyin selvan