ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: I | பொன்னியின் செல்வன் - படமா? பாடமா?

Ponniyin Selvan: I | பொன்னியின் செல்வன் - படமா? பாடமா?

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan: I | வரலாற்றில் வாழ்ந்த இரு அரசர்கள், அதிலும் குறிப்பாக தரணி புகழும் இராஜராஜ சோழன் அரியணை ஏறும் முன் அதற்கு தகுதியான அரச குடும்பத்தினர், அரசு ஏற்று ஆண்ட ஒருவன் என்னும் வரலாற்று உண்மையை வைத்து அமரர் கல்கி தன் கற்பனையில் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் தான் இந்த பொன்னியின் செல்வன்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செப்டம்பர் 30 திரைக்கு வரவிருக்கும் பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கம், ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி மற்றும் பெரும் நட்சத்திர பட்டாளம் கொண்டு வருவதால் மட்டும் தானா இதற்கு இத்தனை பெரிய வரவேற்பு? இல்லை இது என்ன உண்மை சம்பவமா? மற்ற மொழி படங்களுக்கு பதிலாக நம் பங்கிற்கு நாம் முன் வைக்கும் பிம்பமா? இது போன்ற பற்பல கேள்விகள், பதில் தேட முயல்வோம், வாருங்கள்!?

  பொன்னியின் செல்வன் உண்மை சம்பவமா?

  வரலாற்றில் வாழ்ந்த இரு அரசர்கள், அதிலும் குறிப்பாக தரணி புகழும் இராஜராஜ சோழன் அரியணை ஏறும் முன் அதற்கு தகுதியான அரச குடும்பத்தினர், அரசு ஏற்று ஆண்ட ஒருவன் என்னும் வரலாற்று உண்மையை வைத்து அமரர் கல்கி தன் கற்பனையில் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் தான் இந்த பொன்னியின் செல்வன்.

  இது பாகுபலியை விட பிரம்மாண்டமாக இருக்குமா? இராமாயணம், மஹாபாரதம் போன்று பெரும் காவியமா? பிரபலமான ஆங்கில மொழி தொடர்கள் போன்றதா?

  பிரம்மாண்டம் என்று அதன் வசூலை, உருவாக்கிய செலவுகளை வைத்து மதிப்பீடு செய்ய இயலாது எனில் இது ஒரு பிரம்மாண்டம் உருவானதன் முன்னுரை. அந்த பிரம்மாண்டத்தின் பெயர் “இராஜராஜேஸ்வரம்” என்னும் “பெரிய கோவில்”. அதை கட்டிய மன்னனின் சிந்தனை உருவாக்கத்தின் ஆரம்ப ஊற்று. இப்படி ஒரு கற்றளியை உருவாக்கிய மன்னனின் “சிந்தனையை இப்படி இருக்கும்” எனக்கூறும் காவியம்.

  பெருங்காப்பியங்களில் இவர்கள் நல்லவர்கள் இவர்கள் தீயவர்கள் என்னும் கூற்று தெளிவாக கூறப்படும். பெண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் போரிட்ட கதை போன்று இல்லாது, இது மண்ணையும் பெண்ணையும் தர்மத்தின் வழி நின்று அதை அதன் உரிமையாளருக்கே அளித்த கதை. இக்கதையில் அனைவரும் அவரவர் அறத்தின் வழி நடப்பவர்கள், தத்தமது கடமைகள் தவறாது செய்ய நினைப்பவர்கள், செய்கிறவர்கள்.

  மண்ணாசை, காமம் முற்றிய மேற்கத்திய பிரம்மாண்ட ராஜாக்கள் இங்கு இல்லை. தாம் மணந்த கன்னி ஆன போதும் கலவிக்கு அவள் அனுமதி கேட்கும் கண்ணியவான்கள், consent இன்றி தொட கூட முயற்சிக்காத கற்பரசர்கள்.

  அப்போ பொன்னியின் செல்வன் படமா? பாடமா?

  இது தமிழில் பல ஆண்டுகளாய் பலர் மூலமாய் வந்திருக்க வேண்டிய, அதிகம் பேரால் வரவேண்டும் என்று  வேண்டப்பட்ட திரைப்படம் தான்.

  வரலாற்று தழுவல் என்பதால் இது 100% உண்மை இல்லை, இப்படியும் நம் முன்னோர் வாழ்ந்து இருக்கலாம் என்னும் ஆச்சரியக்குறி! இதை வரலாற்று கணக்கிலும் சேர்க்க முடியாது.

  ஆனால், இப்படம் தமிழ் சினிமாவிற்கு தேவை, இதன் வெற்றி அதனினும் அவசியம் தேவை. மேலே கண்ட முகநூல் பதிவை போல் இது நமக்கு முகப்பு நூல். தமிழர் வாழ்வும் வரலாறும் இவ்வையத்தில் உள்ள அனைவரிலும் பெரிது என்னும் கட்டிய முழக்கத்தின் முதல் ஓசை.

  இப்படம் விமர்சன பார்வைக்கோ, நம் தொழில்நுட்ப மேதாவித்தனம் மேட்டிமை காண்பிக்கவோ, பிற மொழிகளுடன் ஒப்பிட்டு பேசவோ வேண்டிய வரிசையில் இல்லை, இது நம் வாரிசுகளுக்கு வாழ்வியலும், வள்ளுவமும், வழித்துணையாய் வரலாற்றினையும் வழங்கும் நேரம்.

  இப்படத்தின் வெற்றிக்கு பின்பு பிள்ளைகளிடம் இது போன்ற பல நாவல்கள்களின் பெருமை கூறி, செல்போன்களை தள்ளி வைத்து, புத்தகங்களை அள்ளி வைத்து வாசிப்பை கூட்ட இயலும், மென்மேலும் பல்வேறு வரலாற்று புதினங்கள், சங்க இலக்கியங்க நிகழ்வுகளை திரையிட்டும் காட்டவும் முடியும். எடுத்துக்காட்டுக்கு கண்ணகியும் கோவலனும் காதல் பேசுவது 6வது மாடியாம், கலவி கொள்வது 8வது மாடியாம். நாட்டின் ஒரு வியாபாரியின் வீடே இப்படி இருந்தால், அவன் வாணிபம், அவ்வூரின் சாலைகள், அம்மக்கள், அந்நாட்டின் மன்னன் இன்னும் பலரின் வாழ்வியல் வரலாற்றினை திரைகளில் காட்ட இயலும். நாவலை படித்த அனைவருக்குள்ளும் ஒரு சோழ உலகம் இருக்கும், அதை திரை அரங்கிற்கு வெளியில் இறக்கி, திரை அனுபவத்தை தடையின்றி உணர்ந்த பின் பாராட்டுவோம், பரிந்துரைப்போம்!

  பொன்னியின் செல்வன் புது தடம், புது பாதை, புது நம்பிக்கை!

  - விஷ்ணு நாகராஜன் 

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Ponniyin selvan