ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொடி பறக்குதா? தொய்வின்றி கொட்டும் வசூல்! 5 நாட்களில் 300 கோடி வாரிக்குவித்த பொன்னியின் செல்வன்!

கொடி பறக்குதா? தொய்வின்றி கொட்டும் வசூல்! 5 நாட்களில் 300 கோடி வாரிக்குவித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னத்தின் கேரியரில் இது மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.

  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

  தியேட்டர் வர்த்தக விவரங்களின் படி இப்படம் உலகளவில் ரூ 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அதே நேரத்தில் தமிழக வசூலில் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்து இருக்கும் பொன்னியின் செல்வன் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

  'லூசிபர் திருப்தியில்லை' ஒரிஜினல் படத்தை சீண்டிய சிரஞ்சீவி! கொதித்த மோகன்லால் ஃபேன்ஸ்!

  வர்த்தக ஆய்வாளர் திரிநாத் உறுதிப்படுத்தியுள்ள தகவலின் படி உலகளவில் ரூ 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது பொன்னியின் செல்வன். முதல் பாகம் மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில் 2ம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அருள்மொழிவர்மனின் ஆரம்பகால வாழ்க்கையின் கதையை முதல் பாகம் விவரித்துள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலாவும் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் நிலவரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

  வீடா? ஸ்டார் ஹோட்டலா? 53 வது மாடியில் ரூ.48 கோடிக்கு வீடு வாங்கிய மாதுரி தீட்சித்!

  அதில் “உலகளவில்  பொன்னியின் செல்வன் வசூல் ரூ 300 கோடியை தாண்டியுள்ளது" என கூறியுள்ளார்.   இருப்பினும், பொன்னியின் செல்வன் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் யாஷ் நடித்த கே.ஜி.எஃப்  2 ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, ​​

  அந்த இரண்டு படங்களும் ரூ 600 கோடிக்கு மேல் வசூலை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

  தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் படத்தை பார்க்க பொதுமக்கள் தியேட்டர்களில் குவிந்து வந்தனர். இந்த வாரம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இப்படம் ரூ 300 கோடியை தாண்டியுள்ளது, தமிழகத்தில் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மணிரத்னத்தின் கேரியரில் இது மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் ஓப்பனிங்காகவும்  மாறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Box office, Kollywood, Mani rathnam, Ponniyin selvan, Tamil Cinema