பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் ஹீரோவான அருள் மொழி வர்மனின் பெயர் தவறாக போஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. முன்னதாக இந்த நாவலை திரைப்படமாக உருவாக்குவதற்கு எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தனர்.
1990களில் இதற்கான முயற்சியை மணிரத்னம் மேற்கொண்டு, பின்னர் அதனை கைவிட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலின்படி இதன் கதாநாயகனாக, ‘ராஜ ராஜசோழன்’ எனப் பரவலாக அறியப்படும் அருள்மொழி வர்மன் இடம் பெற்றிருப்பார்.
ஆனால் இன்று மதியம் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசர் அறிவிப்பு போஸ்டரில், அருள்மொழி வர்மன் என்பதற்கு பதிலாக அருண் மொழி வர்மன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் அதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்டரை இப்படி கவனக்குறைவாகவா வெளியிடுவார்கள் என படக்குழுவினர் மீது விமர்சனம் கிளம்பியுள்ளது. அதே நேரம் இலக்கண விதிப்படி அருள்மொழி வர்மன் என்ற பெயரை, அருண்மொழி வர்மன் என்று எழுதுவது தான் சரி என்கின்றனர் மொழியியலாளர்கள். படக்குழு சரியாகத்தான் எழுதி இருப்பதாகவும் விளக்குகின்றனர்.
"லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ றெழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப"
எனும் நன்னூல் புணர்ச்சி இலக்கண விதிப்படி, நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
(ளகரம் ணகரமாதல்)
அருள்+மொழி = அருண்மொழி
முன்னதாக ஆதித்த கரிகாலன் நடித்திருக்கும் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இடப்பட்ட போஸ்டர் வெளிவந்தது. இதனை நாமம் என்று நெட்டிசன்கள் சிலர் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.
இதேபோன்று த்ரிஷாவின் உடையும் சர்ச்சைக்குள்ளானது. இது தமிழ்நாட்டு பாரம்பரியம் தானா என்று முன்பு த்ரிஷாவின் போஸ்டர் வெளிவந்தபோது விமர்சனங்கள் எழுந்தன.
விஜய் மனைவி சங்கீதா விஜய்யின் தங்கையைப் பார்த்திருக்கிறீர்களா? ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே!
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது செப்டம்பர் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.