ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூலில் கொடிகட்டி பறக்கும் பொன்னியின் செல்வன் - தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

வசூலில் கொடிகட்டி பறக்கும் பொன்னியின் செல்வன் - தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 13  நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை  163 ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.  இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்து வந்தது.

இதற்கு பலனாக தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் 13 நாட்களில் 163 கோடி வசூல் செய்துள்ளது.  இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் என்ற பெயரை தற்போது பெற்றுள்ளது.

Also read... பிக்பாஸ் வீட்டில் நேத்து டீ சண்டை... இன்னைக்கு சாம்பார் சண்டையா! - வெளியானது கலேபர ப்ரோமோ!

இதற்கு முந்தைய இடத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பிடித்துள்ளது.  அந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 180 கோடி ரூபாய் (Life Time) வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

அந்த சாதனையை பொன்னியின் செல்வன் இந்த வார இறுதிக்குள் முறியடிக்கும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பொன்னின் செல்வன் ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan