முகப்பு /செய்தி /entertainment / ரூ.500 கோடி வசூலிக்குமா பொன்னியின் செல்வன்? தீபாவளி படங்களால் தியேட்டர் சிக்கல்!

ரூ.500 கோடி வசூலிக்குமா பொன்னியின் செல்வன்? தீபாவளி படங்களால் தியேட்டர் சிக்கல்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே பொன்னியின் செல்வன் வசூலை குவித்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக தமிழகம் தாண்டி வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. அதுவும் பொன்னியின் செல்வன் இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

அதில் தமிழகத்தில் மட்டும் 190 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 53 கோடியும், வளைகுடா நாடுகளில் 35 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை அல்லது ஆயுத பூஜை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கினார். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Read More: சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராகும் கார்த்தி!

 பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும், குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் மணிரத்னம் சமீபத்திய ஊடக உரையாடலில் கூறியிருந்தார். இப்படம் 2023 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வசூலில் படம் போய்க்கொண்டு இருந்தாலும் தீபாவளி ரிலீஸ் படங்களால் பொன்னியின் செல்வன் காட்சிகள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது. சொல்லப்போனால் பல தியேட்டர்களிலிருந்து படத்தை தூக்கிவிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

ஒப்பந்தம் இதுதான்..

பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25 சதவீதம், விநியோகஸ்தருக்கு 75 சதவீதம். இரண்டாவது வாரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தருக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் மற்றும் விநியோகஸ்தருக்கு 65 சதவீதம் என திரையிடப்பட்டது. அதேபோல் நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் விநியோகஸ்தருக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டது. அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.

ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai