ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் இப்படியிருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - இயக்குநர் வ.கெளதமன்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் இப்படியிருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - இயக்குநர் வ.கெளதமன்

வ.கெளதமன்

வ.கெளதமன்

ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டான். ஆனால் பாண்டியர்களை குற்றம் சாட்டுவதை போன்று சித்தரிப்புகள் பொன்னியின் செல்வனில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான வரலாறு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன், கீரை வியாபாரிகளுக்கு உரிய இடம் கேயம்பேடு சந்தையில் ஒத்துக்கப்படவில்லை, சென்னை உயர் நீதிமன்றம் உதரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, இது தொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் அவர் சரிசெய்து தருவதாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழ் நிலத்தை சோழ பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இந்த திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லி இருக்க வேண்டும்.

சோழர்களின் சின்னமான புலி கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்து உள்ளார்கள் எனக் கேள்வியெழுப்பிய அவர், ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார், படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும், ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும்.

இது போன்ற வரலாற்றை மடைமாற்றும் செயல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், தமிழர்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் 6-ல் மன்சூர் அலிகான்?

தொடர்ந்து பேசிய கௌதமன், ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டான். ஆனால் பாண்டியர்களை குற்றம் சாட்டுவதை போன்று சித்தரிப்புகள் பொன்னியின் செல்வனில் உள்ளது. இது வடதமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நடவடிக்கை எனவும் சாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சைவம் வைணவம் மட்டுமே தமிழர் சமயம், இந்து மதம் என்கிற மதம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இல்லை. புலிக் கொடியை வைத்தால் மத்திய அரசு தடுக்கும் என்பதற்காக மறைத்தார்களா? பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மடைமாற்றம் செய்துள்ளார்கள் புனைவுகளை தாண்டி உண்மைகளை சொல்லியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Published by:Vijay R
First published:

Tags: Ponniyin selvan