Home /News /entertainment /

யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது பொன்னியின் செல்வன் முதல் பாடல்…

யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது பொன்னியின் செல்வன் முதல் பாடல்…

பொன்னி நதி பாடலில் கார்த்தி...

பொன்னி நதி பாடலில் கார்த்தி...

ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்துப் போன பொன்னி நதி பாடல், மியூசிக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது 5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது.

    பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நேற்று வெளியான முதல் பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது.

    சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளியிடப்படவுள்ளது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பிரச்னைகளுக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை வெற்றிகரமாக 120 நாட்களில் முடித்துள்ளார். குறிப்பாக 2 பாகங்களுமே இந்த 120 நாட்களுக்குள்ளாக படமாக்கப்பட்டுள்ளது.

    இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!

    கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று படத்திலிருந்து முதல் பாடலாக பொன்னி நதியை படக்குழுவினர் வெளியிட்டனர்.



    ஏ.ஆர்.ரகுமான் குரலில் இளங்கோ வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் மனதை வருடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாடலைப் பார்க்க... 



    ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்துப் போன பொன்னி நதி பாடல், மியூசிக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது 5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது.

    விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் இயக்குநர் ஷங்கர்

    முதல் பாடல் வெளியீட்டையொட்டி, சென்னையில் உள்ள தனியார் மாலில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவனாக நடித்த கார்த்தி, பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் பங்கேற்று பாடலை வெளியிட்டனர்.

    லைகா புரொடக்சன்ஸ், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். மணி ரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி