முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் அஜித்தை முந்த முடியாத பொன்னியின் செல்வன்! தமிழகத்தின் முதல்நாள் வசூல் விவரம்!

விஜய் அஜித்தை முந்த முடியாத பொன்னியின் செல்வன்! தமிழகத்தின் முதல்நாள் வசூல் விவரம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

2022 ஆம் ஆண்டில் வலிமை, பீஸ்ட் படத்திற்கு பிறகு இது மூன்றாவது மிகப் பெரிய ஓப்பனிங்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன் படி பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் வலிமை, பீஸ்ட் படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை முறியடிக்கவில்லை என தெரிகிறது.

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் (செப் 30) பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இதன் பட்ஜெட் 500 கோடி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்களில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்கி எழுதிய கற்பனை காவியமான பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக எடுத்து அதை பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்துள்ளனர். ஏற்கெனவே வெளியான பான் இந்தியா படங்களான  RRR, கே.ஜி.எஃப் , விக்ரம் படங்கள் இந்தியா சினிமாவை வேற லெவலுக்கு  எடுத்து சென்றன.

பிரபலங்களின் பார்வையில் பொன்னியின் செல்வன்.. படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

இந்த லிஸ்டில் பொன்னியின் செல்வனும் சேர வேண்டும் என ஒட்டுமொத்த சினிமா விரும்பிகளும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஓப்பனிங்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனம் ரீதியாக படம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. தற்போது படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாக தொடங்கியுள்ளன.

பிரபல ஃபிலிம் அனாலிஸ்ட்டான ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் ரூ. 27 கோடியை தாண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் வலிமை, பீஸ்ட் படத்திற்கு பிறகு இது மூன்றாவது மிகப் பெரிய ஓப்பனிங் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பீஸ்ட், வலிமை படங்களின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Beast, Kollywood, Ponniyin selvan, Tamil Cinema, Valimai