ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படமா? சர்ச்சையாகும் சுஹாசினியின் பேச்சு

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படமா? சர்ச்சையாகும் சுஹாசினியின் பேச்சு

சுஹாசினி மணிரத்னம்

சுஹாசினி மணிரத்னம்

தமிழ்நாட்டில் புதுச்சேரி, பொள்ளாச்சியில் அதிகபட்சம் பத்து நாள்களே படப்பிடிப்பு நடந்தது. மீதி படப்பிடிப்பு இங்கே ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் தான் நடந்தது. ஆகவே, இது உங்களின் படம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்திலும், தெலுங்கானாவிலும் தான் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம் என பேசியிருக்கிறார் நடிகையும் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி. 

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. மேலும் படம் ஏற்கனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

  இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் குழுவினர் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டனர். இதில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, “பொன்னியின் செல்வன் திரைக்கதை தமிழ் என்றாலும் இப்படத்தின் ஷுட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிக நாள்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் புதுச்சேரி, பொள்ளாச்சியில் அதிகபட்சம் பத்து நாள்களே படப்பிடிப்பு நடந்தது. மீதி படப்பிடிப்பு இங்கே ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் தான் நடந்தது. ஆகவே, இது உங்களின் படம். பொன்னியின் செல்வன் உங்களின் படம், நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

  நடிப்பை விட்டு விலகும் மகாலட்சுமி ரவீந்தர்? அடுத்த பிளான் என்ன தெரியுமா?

  இதையடுத்து அந்த வீடியோவை பதிவிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஒரு படத்திற்கு விளம்பரம் தேவை தான். இருந்தாலும் இந்தளவுக்கு உண்மையை மறைப்பதா? சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வன், ஆந்திராவில் படமாக்கப்பட்டதால் அது தெலுங்கர்களின் படமாகுமா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Simbu, Tamil Cinema